\
பங்களாதேஷ் மசூதியில் எரிவாயு கசிவால் விபத்து: ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் மசூதியில் எரிவாயு கசிவால் விபத்து: ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் மசூதியில் எரிவாயு கசிவால் விபத்து: ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழப்பு
Published on

பங்களாதேஷ் நாட்டில் ஒரு மசூதியில் சந்தேகத்திற்குரிய வகையில் எரிவாயுக் குழாய் கசிந்த விபத்தில், வழிபாடு செய்துகொண்டிருந்த மக்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்துள்ள பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டாக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வெள்ளியன்று இரவில் ஏற்பட்டுள்ள விபத்துக்கு, வாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே காரணம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ள 37 பேர் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில், ஒரு குழந்தை உள்பட 17 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com