காங்கோவில் அதிபர் தேர்தல்!

காங்கோவில் அதிபர் தேர்தல்!
காங்கோவில் அதிபர் தேர்தல்!

காங்கோவில் 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த அதிபர் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

காங்கோ நாட்டில் அதிபரின் ஆட்சிக்காலம் கடந்த 2015 டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பதவிக் காலம் முடிந்தும், அந்நாட்டு அதிபர் ஜோசப் கபிலா, ஆட்சியை விட்டு விலகாமல் இருந்ததால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டங்களின் போது, காங்கோ போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பான வன்முறைப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நட‌க்க வேண்டி இருந்த நிலையில், பஞ்சம் மற்றும் நோயால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கோவின் அதிபர் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் சுமார் 4.3 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்‌பட்டு ஜனவரி 13ல் புதிய அதிபருக்கான பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com