\
7 வயது மகனுடன் ஆபாச புகைப்படம் வெளியிட்ட கானா நடிகைக்கு 3 மாதம் சிறை

7 வயது மகனுடன் ஆபாச புகைப்படம் வெளியிட்ட கானா நடிகைக்கு 3 மாதம் சிறை

7 வயது மகனுடன் ஆபாச புகைப்படம் வெளியிட்ட கானா நடிகைக்கு 3 மாதம் சிறை
Published on

கானா நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரோஸ்மண்ட் ப்ரவுன் என்கிற அகுப்பம் போலோ தனது மகனின் 7வது பிறந்தநாளன்று அவருடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் அவருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ப்ரவுன் தனது மகனின் பிறந்தநாளன்று இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கவனித்த கானா தலைநகர் அக்ரா நீதிமன்றம் ஆபாசம் மற்றும் வன்முறைக்கு கீழான சட்டத்தின்கீழ் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது, தனிநபரின் தனியுரிமை அல்லது ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவது, ஒருவரின் கவுரவத்திற்கும் சுய மதிப்புக்கும் தீங்கு விளைவிக்கும் வீட்டு வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்ததாகவும், இந்த மூன்று குற்றங்களுக்கும் சேர்த்து அவருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் தனி பெற்றோராக தனது மகனை வளர்த்துவருவதால் இது குடும்ப வன்முறைக்குள் அடங்கும் எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து பிரபல அமெரிக்க பாப் பாடகி கார்டி பி கூறுகையில், ‘’அமெரிக்கர்கள் இதுபோன்ற பல போட்டோஷூட்டுகளை நடத்தி பார்த்திருக்கிறேன். இது என்னுடைய ஸ்டைல் இல்லையென்றாலும், அவர் பாலியல்ரீதியான நோக்கத்தில் இதை செய்யாமல் இயல்பாக செய்திருக்கவேண்டும். சிறைத்தண்டனை சற்று கடினமானது என்றுதான் தோன்றுகிறது’’ என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com