\
Furious Khamenei warns of cross-border attacks: Iran threatens the US
america vs ironani

எல்லை தாண்டி தாக்குவோம்! அமெரிக்காவை மிரட்டும் ஈரான்! கடும் கோபத்தில் காமேனி?

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், எல்லை தாண்டி மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இத்தகைய எச்சரிக்கை விடுக்க என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியிலும் பதற்றம் அதிகரித்து, சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்னர் ஏற்பட்ட போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Iran - America War
Iran - America War AI

இந்தச் சூழலில்தான், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அந்நாட்டின் மூத்த ராணுவத் தளபதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் பாதுகாப்புப் படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான பதிலடி உடனடியாகவும், வலுவாகவும், புவியியல் எல்லைகளுக்கு அப்பாலும் இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான ராணுவ இலக்குகள் மட்டுமின்றி, அவர்களுடன் தொடர்புடைய பிற சொத்துகளையும் ஈரானின் தாக்குதல் இலக்குகளுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கமேனி அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், எதிரிகள் மீண்டும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினால், அந்த மோதல் எப்போது முடிவுக்கு வர வேண்டும் என்பதை ஈரானின் ராணுவமும் மக்களுமே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஈரானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியாவும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், போரின் தாக்கம் மிகப்பெரிய புவியியல் பகுதிக்குப் பரவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

drone attack
drone attackReuters

மேலும், ஈரானின் பாதுகாப்புத் துறை சார்ந்த மூத்த அதிகாரி மொஹ்சென் ரெசாயியும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த நாடுகளும் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ஈரான் தனது ராணுவத்தை எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி வருவதுடன், பகிரங்க எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Furious Khamenei warns of cross-border attacks: Iran threatens the US
மீண்டும் தொடங்கிய உள்நாட்டுப் போர்.. பொதுமக்களை கொ*ற அரசு.. என்ன நடக்கிறது எத்தியோப்பியாவில் ?