கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை : அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை : அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை : அமெரிக்கா அறிவிப்பு
Published on

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது. 

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமானங்கள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் இல்லாத தங்கும் இடங்களில் தொடர்ந்து முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொள்ளாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடையாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com