\
உடல்நலக் குறைவு: டோமினிகா மருத்துவமனையில் மெஹூல் சோக்சி அனுமதி

உடல்நலக் குறைவு: டோமினிகா மருத்துவமனையில் மெஹூல் சோக்சி அனுமதி

உடல்நலக் குறைவு: டோமினிகா மருத்துவமனையில் மெஹூல் சோக்சி அனுமதி
Published on

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் மெஹூல் சோக்சி டோமினிகா நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து தப்பிய மெஹூல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெஹூல் சோக்சி டோமினிகாவில் சிக்கினார். அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

கடந்த சில நாள்களாக மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப ஆன்டிகுவா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவுக்கு திரும்ப எதிர்ப்பு தெரிவித்து மெஹூல் சோக்சி சார்பில் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஹூல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதற்கு விமானங்கள் மூலம் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து டோமினிகா போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த மெஹூல் சோக்சிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் 3டோமினிகா நாட்டில் இருக்கும் "சைனா பிரண்ட்ஷிப்" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மெஹூல் சோக்சியின் வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் எனவும் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com