ஜப்பானில் குளிரூட்டப்பட்ட உறைந்த பாப்கார்ன் பிரபலமாகி வருகிறது.
ஒசாகா மாகாணத்திலுள்ள குளிர்பான கடை ஒன்றில் இனிப்பு சோளத்துடன் கிரீமி பாப்கார்ன்களை தயாரித்து அதனுடன் 200 டிகிரி செல்சியஸில் உள்ள திரவ நைட்ரஜனை சேர்க்கின்றனர். அப்போது அந்த பாப்கார்ன் உறைந்த நிலைக்கு மாறுகிறது. அதனை சாப்பிடும்போது குளிர்ச்சியாகவும், நாவில் வைத்தவுடன் உருகிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
ஓரு கப் உறைந்த பாப்கார்ன் இந்திய மதிப்பில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உறைந்த பாப்கார்ன் விற்பனையாவதாக கடையின் உரிமையாளர் ஜின்னோ கசுகி தெரிவிக்கிறார்.