துருக்கி - சிரிய எல்லையில் மீண்டும் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்... மீண்டும் பதிவான பலி!

துருக்கி - சிரிய எல்லையில் மீண்டும் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்... மீண்டும் பதிவான பலி!
துருக்கி - சிரிய எல்லையில் மீண்டும் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்... மீண்டும் பதிவான பலி!

துருக்கி சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இரண்டு முறை ஏற்பட்டுள்ளது நிலநடுக்கம். இதில் குறைந்தபட்சம் மூவர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி சிரிய எல்லையில் கடந்த பிப். 6–ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கிட்டத்தட்ட 46,000 பேர் வரை உயிரிழந்தனர். அது ஏற்பட்டு இரண்டு வாரங்களேயாகியுள்ள நிலையில், தற்போது அங்கு  மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவுகோலில் நேற்று இரவு 8 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டக்யா என்ற பகுதியின் மத்தியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையமும் துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் அளித்த தகவலின்படி, 2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் மூன்று பேர் வரை பலியாகியிருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் துருக்கியின் அமைச்சரொருவர் கூறியுள்ளார். சரியாக 8.04-க்கு டெஃப்னே என்ற நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ஹதாய் பகுதியில் உணரப்பட்டிருக்கிறது. இதேபோல அடுத்த சில நிமிடங்களிலேயே, 5.8 ரிக்டர் அளவுகோலில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், இஜிப்தில் உணரப்பட்டதாக துருக்கியின் அரசு சார் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹதாய் மாகாணம் மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) உள்ளது என்பதால், அங்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்களால் கடல் மட்டம் 50 செ.மீ உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள பேரிடர் நிறுவனம், கடற்கரையிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com