பிரான்ஸில் பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களை கண்டித்து, அந்நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தொழிலாளர் சட்டத்தில் கடந்த மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கையெழுத்திட்டார். இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலைகளை குறைப்பது, அடிப்படை ஊதிய உயர்வை நிறுத்துவது உள்ளிட்ட திருத்தங்கள் இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய சட்டத்தால் பொதுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை தரமும், நுகர்வு திறனும் கணிசமாக சரியும் என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்தக் கட்டமாக வரும் 19ம் தேதி மற்றொரு போராட்டத்துக்கு தயாராகும்படி அந்நாட்டின் மிகப் பெரிய தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.