உலகம்
ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு
ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு
ஜெர்மனியின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை மற்றும் 16 மாநிலங்களின் பிரதிநிதிகள் அதிபரை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய பிரான்க் ஸ்டீன்மையர் ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் தான் இருப்பேன் என குறிப்பிட்டார். ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது அந்த நாட்டுக்கு ஒரு அபாயமே என அவர் கூறினார். அங்கு வாழும் மக்களுக்கு அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை இருப்பதாக கூறிய பிரான்க் ஸ்டீன்மையர் அதை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என கூறினார். அவ்வாறு யார் செய்ய முயன்றாலும் அவர்களுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

