தொழிலாளர் விரோதக் கொள்கையை கடைபிடிக்கவில்லை: பிரான்ஸ் அதிபர் மறுப்பு

தொழிலாளர் விரோதக் கொள்கையை கடைபிடிக்கவில்லை: பிரான்ஸ் அதிபர் மறுப்பு
தொழிலாளர் விரோதக் கொள்கையை கடைபிடிக்கவில்லை: பிரான்ஸ் அதிபர் மறுப்பு

தொழிலாளர் விரோத கொள்கையை பின்பற்றுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி‌ய குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மறுத்துள்ளார்.

பிரான்ஸில் தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்த்திருத்தத்‌‌தின் முழு பயன்களும் இரண்டே ஆண்டுகளில் தெரிய வரும் என்று அதிபர் மேக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1,20,000 வேலைகளை குறைப்பது, அடிப்படை ஊதிய உயர்வை நிறுத்துவது உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய புதிய தொழிலாளர் சட்டத்தில் கடந்த மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து செல்வந்தர்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை மேக்ரோன் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையி‌ல் மேக்ரோன், தாம் செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்களுக்கும் அதிபர் தான் என்றும், புதிய சீர்த்திருத்தங்களின் பயன்கள் இரண்டு ஆண்டுகளில் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com