உலகம்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: மரீன் லூ பென்னுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: மரீன் லூ பென்னுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் களத்தில் மரீன் லூ பென்னுக்கு திடீரென மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 7ஆம் தேதி பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் சுற்றில் வெற்றி பெற்ற இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென்னுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
60 ஆண்டுகால பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ரிபப்லிகன்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், மரீன் லூ பென்னின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து வருவது பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெளியாகிய கருத்துக்கணிப்பில் இம்மானுவல் மக்ரோன் 62 சதவீத வாக்குகளும் மரீன் லூ பென் 38 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.