பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு கன்னத்தில் அறை

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு கன்னத்தில் அறை

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு கன்னத்தில் அறை
Published on

பிரான்ஸில் மக்கள் கூட்டத்தை நோக்கி கைகுலுக்கச் சென்ற அதிபர் இமானுவல் மேக்ரூனை, கூட்டத்திலிருந்த நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு மக்களுடன் உரையாடுவதற்காக அதிபர் இமானுவல் மேக்ரூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். DROME மாகாணத்தில் மாணவர்களுடன் உரையாடிய பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்களது அருகில் இமானுவல் மேக்ரூன் சென்றார். யாரும் எதிர்பாராத நிலையில் கூட்டத்திலிருந்த இளைஞர், தமது ஒரு கையால் அதிபரின் கையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் அதிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். உடனிருந்த ஒரு இளைஞர் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு எதிராக முழக்கமிட்டார்.

உடனடியாக அதிபரின் பாதுகாவலர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதிபர் மேக்ரூனை கன்னத்தில் அறைந்த வீடியோ பிரான்ஸில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com