உலகம்
பிரபஞ்ச அழகியாக மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனரே தேர்வு
பிரபஞ்ச அழகியாக மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனரே தேர்வு
பிரபஞ்ச அழகியாக பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டேனேரே, பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 23 வயதான ஐரிஷ் மிட்டேனேரே, பிரான்ஸின் லில்லி பகுதியில் பிறந்தவர். பல் மருத்துவம் பயின்று வரும் ஐரிஷ், கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ராகுவல் பெலிசியர்யும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியாவும் பிடித்தனர்.