சாலையில் ராஜநடை போட்ட நான்கு சிங்கங்கள்: வைரல் வீடியோ
4 சிங்கங்கள் கெத்தாக சாலையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிங்கம் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் கை, கால்கள் நடுங்கும். காரணம், நம்மை பாய்ந்து வந்து கடித்துவிடும் என்ற பயம். ஏதோவது வன உயிரியல் பூங்காவிற்குச் சென்றால் கூட கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை பயந்தபடியேதான் பார்ப்போம். தற்போது 4 சிங்கங்கள் கெத்தாக சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சவுத் ஆப்ரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் 4 முரட்டு சிங்கங்கள் சாலையில் பொறுமையாக நடந்து செல்கின்றன. சிங்கங்களுக்கு பின் கார்கள் மெதுவாக வருகின்றன. அதேமசயம் முன்னால் நின்ற காரில் இருக்கும் ஒருவர் சிங்கங்கள் நடந்து செல்வதை வீடியோ எடுக்கிறார். சிங்கங்கள் எந்தத் தொந்தரவும் செய்யாமல் பொறுமையாக நடந்து செல்கின்றன. இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.