\
அமெரிக்கா
அமெரிக்காமுகநூல்

அமெரிக்கா | விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
Published on

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் உள்ள பர்மிங்காம் நகரில் செயல்பட்டு வரும் இரவு விடுதி வாயிலில் ஏராளமானோர் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதில் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

அமெரிக்கா
இலங்கை அதிபரானார் அநுரா குமாரா திஸநாயக்கா... நாளை பதவியேற்பு!

அமெரிக்காவில் ஒரே வருடத்தில் 403 முறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com