இதை கருத்தில்கொண்டு, தாய் நிறுவனமான FACEBOOK INC-கிற்கு மெட்டா என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவிக்கிறார் மார்க் ஜூக்கர்பெர்க். நண்பர்கள், உறவினர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் உரையாடும் அனுபவத்தை பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்க மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் பெயர்கள் அப்படியே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.