ஜிம்மி கார்ட்டர்
ஜிம்மி கார்ட்டர்x page

அமெரிக்கா | முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 100ஆவது வயதில் காலமானார்.
Published on

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 100ஆவது வயதில் காலமானார். இவர் அமெரிக்காவின் 39ஆவது அதிபராக 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தவர். ஜார்ஜியா மாகாணத்தில் பிறந்தவரான கார்ட்டர் பொதுமக்கள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அதன் மூலமாகவே அவர் அமெரிக்க அதிபர் பதவிக்கு உயர்ந்தார்.

ஜார்ஜியா மாகாண ஆளுநராக இருந்துவிட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக 1976 அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். நேர்மையான வெளிப்படைத்தன்மைமிக்க நிர்வாகத்துக்காகவும் மனிதநேயப் பணிகளுக்காகவும் பாராட்டப்பட்டார்.

இவர் அதிபராக இருந்தபோது இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக் காரணமானார். 1982இல் கார்ட்டர் மையத்தைத் தொடங்கினார். தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படுவதைக் கண்காணிப்பது, உலகின் வறுமை மிக்க பகுதிகளில் ஏற்படும் நோய்களை ஒழிப்பது போன்ற பணிகளைத் தனது கார்ட்டர் மையத்தின் மூலம் முன்னெடுத்தார்.

உலக அளவில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்காக உழைத்தார். இதற்காக 2002இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிப்ரவரி 2023இல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கார்ட்டரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன், அடுத்த அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப், எகிபது அதிபர் அப்துல் ஃபடா அல்-சிசி, ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜிம்மி கார்ட்டர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com