“கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது” - டொனால்ட் ட்ரம்ப்!

“கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது” - டொனால்ட் ட்ரம்ப்!

“கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது” - டொனால்ட் ட்ரம்ப்!
Published on

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், அது நன்றாக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு தனது ஆதரவாளர்கள் தயங்காமல் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பெருந்தொற்று நோயான கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் FOX நியூசுடனான நேர்காணலின்போது இதனை தெரிவித்துள்ளார்ட்ரம்ப். 

“கொரோனா தடுப்பு மருந்தை நான் நிறைய பேருக்கு பரிந்துரைக்கிறேன். அனைவரும் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் அதை செய்யலாமா? வேண்டாமா? என்பது அவரவர் விருப்பம். 

இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது. வேலையும் செய்கிறது. இது ஒரு சிறந்த மருந்து. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பு மருந்துகளை தயாரித்து வரும் பார்மசி நிறுவனங்களுடன் அயராமல் உழைத்து வருகிறது|” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கத்தின் பரவல் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com