“என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை” - டொனால்ட் ட்ரம்ப்

“என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை” - டொனால்ட் ட்ரம்ப்

“என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை” - டொனால்ட் ட்ரம்ப்
Published on

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பதவியை இழந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கிட்டத்தட்ட கடந்த ஜனவரி 20க்கு பிறகாக தற்போது பொது நிகழ்வில் பங்கேற்ற ட்ரம்ப் “என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

2024 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி அரியணையில் ஏறும் எனவும் ட்ரம்ப் தனது உரையில் சூளுரைத்துள்ளார். 

“உங்கள் ஆதரவுடன் குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்படி அமைக்கும்  ஆட்சியில் யார் அதிபர் என்பதை எண்ணி நான் ஆச்சரியப்படுகிறேன். யாருக்கு தெரியும்? மூன்றாவது முறையாக நானே கூட அவர்களை வீழ்த்தலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

மீண்டும் இந்த உரையின் மூலம் கடந்த 2020 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது அவர் தான் என பொய் உரைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால் சூழ்ச்சியின் காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

“நான் புதிய கட்சி தொடங்கப்போவதில்லை. நாம் எல்லாம் ஒன்றாக இணைந்து குடியரசுக் கட்சியை கட்டமைப்போம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com