தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரடெரிக் வில்லியம் டி கிளர்க் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 1936-இல் அந்த நாட்டில் உள்ள ஜோகானஸ்பேர்க் நகரில் பிறந்தவர். 1989 முதல் 1994 வரையில் தென்னாப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றியவர். தேசிய கட்சியை சார்ந்தவர். 

தென்னாப்பிரிக்க நாட்டில் கடைசியாக அதிபர் பதவியை அலங்கரித்த வெள்ளையர். அதற்கு பின்னதாக ஆட்சி செய்த ஐந்து அதிபர்களும் கருப்பினத்தை சார்ந்தவர்கள். 

நிறவெறி பேதமற்ற ஜனநாயகத்தை ஆட்சி மற்றும் அதிகாரத்தில் கொண்டுவர உத்தரவிட்டவர். 1994-இல் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது இவரது கட்சி. 

1993-இல் அமைதிக்கான நோபல் பரிசை மண்டேலாவுடன் பகிர்ந்து கொண்டார். அவரது இறப்புக்கு காரணம் புற்றுநோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com