மாலத்தீவில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் அதிபருக்கு காயம்

மாலத்தீவில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் அதிபருக்கு காயம்
மாலத்தீவில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் அதிபருக்கு காயம்

மாலத்தீவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் காயமடைந்தார்.

2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த முகமது நஷீத், தற்போது மாலத்தீவு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைநகர் மாலேயில் உள்ள முகமது நஷீத்தின் வீட்டிற்கு அருகே நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். முகமது நஷீத் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com