\
Former Kosovo President Hashim Thaci sentenced to 25 years
Hashim Thaci reuters

முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை.. கொசோவோவை அதிரவைத்த நீதிமன்ற தீர்ப்பு!

சர்வதேசச் சட்டப் பாதுகாப்பின் நோக்கில் இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்பட்டாலும், கொசோவோ நாட்டில் இது பெரும் எதிர்ப்பையும் அரசியல் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது.
Published on

கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA அமைப்பின் தலைவராக அவர் இருந்த காலத்தில், அரசியல் எதிரிகள் மற்றும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்ட பொதுமக்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்தப் போர்க்குற்ற வழக்கில், கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Hashim Thaci
Hashim Thaci reuters

இவருடன் குற்றம்சாட்டப்பட்ட மற்ற KLA தலைவர்களான யாகுப் க்ராஸ்னிகிக்கு 25 ஆண்டுகளும், கத்ரி வெசெலிக்கு 18 ஆண்டுகளும் மற்றும் ரெக்ஷெப் செலமிக்கு13 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டில் ஹாசிம் தாசி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டப் போராட்டத்தைச் சந்தித்து வந்தார். சர்வதேசச் சட்டப் பாதுகாப்பின் நோக்கில் இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்பட்டாலும், கொசோவோ நாட்டில் இது பெரும் எதிர்ப்பையும் அரசியல் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com