உலகம்
”துருக்கி எரிந்து கொண்டிருக்கிறது” : கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ- 8 பேர் உயிரிழப்பு
”துருக்கி எரிந்து கொண்டிருக்கிறது” : கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ- 8 பேர் உயிரிழப்பு
துருக்கியில் கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயால் வனப்பகுதி சாம்பலாகி வருகிறது. இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் உள்ள மனாவ்கட், மர்மாரிஸ், மிலாஸ் உள்ளிட் இடங்களில் 5 நாட்களாக தீ எரிந்துக்கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற கடற்கரையொட்டிய பகுதிகளில் ஆரஞ்சு நிற புகையுடன் தீ எரிந்தது. தீயை அணைக்க பல முயற்சிகள் எடுத்தாலும், வேகமாக மற்ற இடங்களுக்கு பரவுவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.