\
புதிய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கும் இலங்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்

புதிய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கும் இலங்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்

புதிய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கும் இலங்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்
Published on

இலங்கையின் புதிய அரசமைப்பு சட்டம் விரைவில் தயாராகும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் பேசிய அவர், அரசமைப்பு சாசனத்தின் வரைவு வடிவம் தற்போது தயாராகி வருவதாகவும் இதற்கு வரும் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் மறுத்துவிட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபர் கோத்தபய ராஜபக்ச தரப்பு புதிய அரசமைப்பு சாசனம் கொண்டு வரப்படும் என உறுதியளித்திருந்தது. இலங்கைக்கு புதிய அரசமைப்பு சாசனம் கொண்டு வரும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டாலும் பல்வேறு காரணங்களினால் அது தள்ளிப்போடப்பட்டு வந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com