7 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஃபோர்டு நிறுவனம்..!

7 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஃபோர்டு நிறுவனம்..!
7 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஃபோர்டு நிறுவனம்..!

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு , சுமார் 7 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது. ஏன் தெரியுமா?


ஃபோர்டு நிறுவனத்தின் எப் சீரிஸ் டிரக், மஸ்டாங், ஸ்ப்ளோரர், ட்ரான்சிட், எக்ஸ்பிடிஷன், எஸ்கேப், ரேஞ்சர் மற்றும் எட்ஜ் மாடல்களை திரும்ப பெறுகிறது. எப்ஃ சீரிஸ் டிரக், அமெரிக்காவின் அதிக அளவில் விற்பனை ஆகும் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு நிறுவனம், அமெரிக்காவின் நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைக்கு சமர்ப்பித்த தகவலின் படி, வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பொருத்தப்பட்டுள்ள மின் சாதனத்தில் ஏற்பட்ட  கோளாறே இத்தகைய தவறுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டதாக, எந்த தகவலும் இல்லை என்கிறது அந்நிறுவனம்.

டீலர்கள் வாகனங்களின் பழுது ஏற்பட்ட பின்புற கேமராவை கட்டணமின்றி சரிசெய்து தர ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. நவம்பர் 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் சிறந்த வாகனங்களிலும் குறைபாடு உள்ளது என்பது, தரக்கட்டுப்பாட்டின் மீது கவனம் கொள்ளவேண்டிய தருணம் என்றாலும், வாகனங்களின், சிறிய குறைபாடு காரணமாக வாகனங்களை திரும்ப பெறுவது என்பது வாகன உற்பத்தியாளர்களின் பொதுவான நடைமுறை ஆகும்.

இதன் முன்பு, மஸ்டாங் 2020 மாடல்களின் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷசன் வாகனங்களில் பிரேக்குகளின் குறைபாடு காரணமாக சில வாகனங்களை திரும்ப பெற்றது, ஃபோர்டு நிறுவனம்.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள ஜிம் பார்லி, ஃபோர்டு நிறுவனத்தின் பெயரை,மீண்டும் நிலை நாட்ட உறுதி ஏற்றுள்ளார். மேலும், ஃபோர்டு நிறுவனத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்புகளையும் அறிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com