உலகின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் - இந்தியாவுக்கு எந்த இடம்?

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்த வருடம் வெளியிட்டிருக்கும் உலக பணக்காரர்களின் பட்டியலில் பெண்களின் தரவரிசையில் முதல் பத்து இடங்களை பெற்றிருப்போர் யார் யார் என பார்க்கலாம்.
பணக்காரபெண்களின் பட்டியல்
பணக்காரபெண்களின் பட்டியல்புதியதலைமுறை

ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி 2020ல் 328 ஆக இருந்த பெண்களின் பட்டியல் இந்த ஆண்டு 337 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவர்களின் மொத்த சொத்துக்கள் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 60% அதிகரித்து $1.53 டிரில்லியனாக உள்ளது.

உலக பணக்கார பெண்களின் பட்டியல்

முதல் இடம்

பெயர்: பெட்டன்கோர்ட் மேயர்ஸ்

நிகர மதிப்பு : $92.2 பில்லியன்

வயது: 69

நிறுவனம்: L'Oréal

நாடு: பிரான்ஸ்

இவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் பணக்கார பெண் என்ற பட்டத்தை பெற்று வருகிறார்.

இரண்டாவது இடம்

பெயர் :ஆலிஸ் வால்டன்

நிகர மதிப்பு: $72.7 பில்லியன்

வயது: 73

நிறுவனம்: வால்மார்ட்

நாடு: அமெரிக்கா

பணக்காரபெண்களின் பட்டியல்
மதுரை: மீண்டும் ஒரு வழக்கில் கைதான TTF வாசன்... “படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் வேண்டும்” என மனு!

மூன்றாவது இடம்

பெயர் : ஜூலியா கோச்

நிகர மதிப்பு: $66.1 பில்லியன்

வயது: 60

நிறுவனம்: கோச் இண்டஸ்ட்ரீஸ்

நாடு: அமெரிக்கா

நான்காவது இடம்

பெயர்: ஜாக்குலின் மார்ஸ்

நிகர மதிப்பு: $38.7 பில்லியன்

வயது: 83

நிறுவனம்: இனிப்புகள், செல்லப்பிராணி உணவு (mars inc, மற்றும் IAMS போன்ற பிராண்டுகள்)

நாடு: அமெரிக்கா

ஐந்தாவது இடம்

பெயர்: மெக்கன்சி ஸ்காட் (எழுத்தாளர்)

நிகர மதிப்பு: $37.7 பில்லியன்

வயது: 52

நிறுவனம்: அமேசான்

நாடு: அமெரிக்கா

ஆறாவது இடம்

பெயர் : சாவித்ரி

நிகர மதிப்பு : $35.5 பில்லியன்

வயது : 74

நிறுவனம் : JSW group

நாடு : இந்தியா

பணக்காரபெண்களின் பட்டியல்
“மிகப்பெரிய, உலகம் காணாத வரலாற்று வெற்றியை படைப்பேன்” - நிபந்தனை ஜாமீன் பெற்றபிறகு TTF வாசன் பேச்சு

ஏழாவது இடம் 

பெயர் :ரஃபேலா அபோன்டே-டயமண்ட் (MSC இன் இணை நிறுவனர்.)

நிகர மதிப்பு: $33.3 பில்லியன்

வயது: 78

நிறுவனம்: கப்பல் போக்குவரத்து

நாடு: இத்தாலி

எட்டாவது இடம்

பெயர் : மிரியம் அடெல்சன் (மருத்துவத்தில் பயிற்சி பெற்றவர் )

நிகர மதிப்பு: $32.1 பில்லியன்

வயது: 77

நிறுவனம்: கேசினோக்கள், las vegas sands

நாடு: அமெரிக்கா

ஒன்பதாவது இடம்

பெயர்: ஜினா ரின்ஹார்ட் (சுரங்க மற்றும் விவசாய ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் குழுமத்தின் தலைவர்)

நிகர மதிப்பு: $30.7 பில்லியன்

வயது: 70

நிறுவனம்: சுரங்கம்

நாடு: ஆஸ்திரேலியா

பத்தாவது இடம்

பெயர்: அபிகெயில் ஜான்சன்

வயது: 62

நிகர மதிப்பு : $ 29.6 பில்லியன்

நிறுவனம்: fidelity investments

நாடு : அமெரிக்கா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com