உலகம்
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தூதரக ரீதியில் புறக்கணிக்கப்பதாக கனடா அறிவிப்பு
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தூதரக ரீதியில் புறக்கணிக்கப்பதாக கனடா அறிவிப்பு
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிக்காக தங்கள் நாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வீரர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.