அமெரிக்காவில், பீட்சா டெலிவரி செய்தவர், கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய சம்பவம்
சம்பவம் நடந்த இடம்அமெரிக்கா

டிப்ஸ் அதிகமாக தராததால் கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய பீட்சா டெலிவரி பெண்

புளோரிடா மோட்டலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பிட்சா டெலிவரி செய்தவர் பலமுறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது,
Published on

அமெரிக்காவில், பீட்சா டெலிவரி செய்தவர், கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிகா புளோரிடா மாகாணத்தில் ரலாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிம்மியில் ஒரு பெண் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது காதலன் மற்றும் தனது ஐந்து வயது பெண்குழந்தையுடன் அப்பகுதியில் மோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பிறகு மூவரும் சாப்பிடுவதற்காக ஆன்லைனில் பீட்சா ஆடர் செய்து இருக்கிறார்.

அவர்கள் ஆடர் செய்த பீட்சாவை 22 வயதான ப்ரியானா அல்வெலோ என்பர் டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்ததற்கு டிப்ஸாக 2 டாலரை அப்பெண் ப்ரியானா அல்வெலோக்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் டிப்ஸ் 2 டாலர் போதாது... அதிகமாக வேண்டும் என்று அப்பெண்ணிடம் கேட்டு இருக்கிறார் ப்ரியானா... ஆனால் அப்பெண் அவருக்கு டிஸ்ப் அதிகம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ப்ரியானா அல்வெலோ முகமூடி அணிந்த தனது ஆண் நண்பர்களுடன் அப்பெண் தங்கியிருந்த மோட்டலுக்கு வந்து, அவரது காதலரை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, அப்பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி இருக்கிறார். பிறகு அந்த அறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அப்பெண்ணை மீட்ட அவரது காதலன் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார் அப்பொழுது அப்பெண்ணை சோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அப்பெண் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து ப்ரியானா அல்வெலோ கைது செய்ததுடன், தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளியைத் தேடி வருவதாகக்கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com