\
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்  கைது!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!
Published on: 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்தவர், நிவியன் பெட்டிட் (வயது 39). செவிலியரான இவர் தன் கணவருக்கு அனுப்பிய வீடியோவில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து நிவியன் பெட்டிட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ''நிவியன் பெட்டிட் அனுப்பிய வீடியோவில், அதிபர் ஜோபைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மீதான வெறுப்பை பற்றி பேசுகிறார். மேலும் கமலா ஹாரிசை கொலை செய்வதை பற்றியும் பேசி உள்ளார். 'கமலா ஹாரிஸ் நீங்கள் சாகப் போகிறீர்கள். உங்கள் நாட்கள் ஏற்கனவே எண்ணப்பட்டு விட்டன' என்று நிவியன் பெட்டிட்  கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்க உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நிவியன் பெட்டிடின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com