டாய்லெட்டிலிருந்து எடுத்த மோதிரம்: 21 ஆண்டுகள் கழித்து பூரித்துப்போன தம்பதியின் சுவாரஸ்யம்

டாய்லெட்டிலிருந்து எடுத்த மோதிரம்: 21 ஆண்டுகள் கழித்து பூரித்துப்போன தம்பதியின் சுவாரஸ்யம்
டாய்லெட்டிலிருந்து எடுத்த மோதிரம்: 21 ஆண்டுகள் கழித்து பூரித்துப்போன தம்பதியின் சுவாரஸ்யம்

ஒவ்வொரு தம்பதியின் வாழ்க்கையிலும் முக்கியமானதொரு நிகழ்வுகளில் ஒன்று மோதிரம் மாற்றிக் கொள்வது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த முக்கியத்துவம் வாய்ந்த மோதிரம் எப்படியாவது காணாமல் போய்விட்டால் அது காலத்துக்கும் மனதில் ஆறாத வடுவாகவும் குற்றவுணர்ச்சியாகவுமே இருக்கும். அப்படியான உணர்வில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக இருந்து வந்த தம்பதியை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஜோடிதான் நிக் மற்றும் ஷைனா. இவர்களின் நிச்சயதார்த்த வைர மோதிரம் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு டாய்லெட்டில் தவறுவதலாக விழுந்திருக்கிறது.

ஒரு நாள் இதுப்பற்றி ஷைனா தன் கணவர் நிக்’கிடம் இதுப்பற்றி, “என்னுடைய மோதிரத்தை தொலைத்துவிட்டே என நினைக்கிறேன். தவறுதலாக டாய்லெட் ஃப்ளஷில் போட்டுவிட்டேன்” என கூறியிருக்கிறார். இதனையடுத்து நிக்கும், ஷைனாவும் சேர்ந்து கொடூரமான தேடுதல் வேட்டையையே நடத்தியிருக்கிறார்கள்.

“செப்டிக் டேங்க்கிற்குள் ஏறி பம்பு மூலம் எல்லாவற்றையும் அகற்றியும் பார்த்துவிட்டோம். ஆனால் உள்ளே விழுந்த மோதிரம் கிடைக்கவே இல்லை” என ஷைனா நியூஸ் சேனல் 8 என்ற செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் கடந்த நவம்பர் மாதம் நிக்கின் தாய் ரினி ப்ளம்பரை அழைத்து டாய்லெட்டை மாற்ற செய்திருக்கிறார். அந்த ப்ளம்பிங் பணியின் போதுதான் 2 தசாப்தங்களுக்கு முன்பு தொலைக்கப்பட்ட நிக்-ஷைனாவின் வைர மோதிரம் மீட்கப்பட்டிருக்கிறது.

இது பற்றி ரினியிடம், “இது ஷைனாவின் மோதிரம்தானா” என நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு நிக் கேட்க, அதற்கு “இது உண்மையில் ஷைனாவின் மோதிரம்தான்” என ரினி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அந்த மோதிரத்தை முழுமையாக சுத்தம் செய்த பிறகு நிக்கின் பெற்றோர் அதனை டாய்லெட் வடிவிலான கிஃப்டாக மாற்றி கிறிஸ்துமஸ்-காக ஷைனாவிடம் கொடுத்திருக்கிறார்கள். இதனைக் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கிறார் ஷைனா. “இப்படி தேம்பி தேம்பி அழுவதால் என் மஸ்காராவெல்லாம் மொத்தமும் அழிந்துவிட்டது” என்றும் ஷைனா தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com