மதிப்பு ரூ.5.35 லட்சம்: ஏலத்திற்காக காத்திருக்கும் 'பிளாப்பி டிஸ்க்’
ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து இடப்பட்ட 'பிளாப்பி டிஸ்க்’ ஒன்று ரூ.5.35 லட்ச மதிப்பில் ஏலத்திற்காக காத்திருக்கிறது
கணினியில் உள்ள தகவல்கள், ஆவணங்கள், படங்கள் போன்றவற்றை சேமிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது 'பிளாப்பி டிஸ்க்'. கணினியின் அடுத்தடுத்த அசுர வளர்ச்சியால் பிளாப்பி பயன்பாடு குறைந்துபோய் தற்போது இல்லாமலேயே போனது.
2010-ம் ஆண்டோடு பிளாப்பி டிஸ்க் தயாரிப்பு முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் தங்களது தயாரிப்புகளை நிறுத்தி வந்த நிலையில் கடைசியாக சோனி நிறுவனம் 'பிளாப்பி டிஸ்க்' தயாரிப்பை நிறுத்தியது.
இந்நிலையில் தற்போது ஏலம் விடப்பட்ட 'பிளாப்பி டிஸ்க்’ ஒன்று ரூ.5.35 லட்ச மதிப்பில் ஏலத்திற்காக காத்திருக்கிறது. அதற்கு காரணம், பிளாப்பி டிஸ்க்கின் மேல் போடப்பட்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் கையெழுத்து. அமெரிக்காவில் உள்ள ஆர்ஆர் ஏல நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து இடப்பட்ட அந்த பிளாப்பி டிஸ்க்கை ஏலத்திற்கு விட தயாராக உள்ளது. ஏல மதிப்பாக 7500 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பிளாப்பி டிஸ்கில் 'Macintosh System Tools Version 6.0' சேமிக்கப்பட்டுள்ளதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.