கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் பெக் ஏர் விமானம் கஜகஸ்தானின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து தலைநகர் நுர் சுல்தானை நோக்கி புறப்பட்டது. சில வினாடிகளிலேயே அந்த விமானம், விமான நிலைய கான்கிரீட் தடுப்பில் மோதி அருகே இருந்த அடுக்குமாடி கட்டடத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை கஜகஸ்தான் அரசு நியமித்துள்ளது. விமானம் புறப்பட்டபோது அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.