\
First Muslim US Senator El-Sayed His Indian Connection
El-Sayedreuters

அமெரிக்க செனட்டில் முதல் முஸ்லிம்.. இந்தியாவுடன் என்ன தொடர்பு?

அமெரிக்க செனட் சபையின் முதல் இஸ்லாமிய செனட்டராக அப்துல் எல்-சயீத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார். இவர் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புடையவராக அறியப்படுகிறார்.
Published on: 

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது, அதிபர் ட்ரம்பின் எஞ்சிய பதவிக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த அரசியல் அலையில், அமெரிக்க வரலாற்றின் புதிய மைல்கல்லாக மிச்சிகன் மாகாணத்தில் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் டொனால்டு ட்ரம்பின் தனிப்பட்ட விமர்சனங்களையும் கடந்து, அமெரிக்க செனட் சபையின் முதல் இஸ்லாமிய செனட்டராக அப்துல் எல்-சயீத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார்.

reuters

இந்த நிலையில், இவர் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புடையவராக அறியப்படுகிறார். டாக்டர் அப்துல் எல்-சயீதின் மனைவி டாக்டர் சாரா ஜுகாகு, கர்நாடகாவின் பட்கல் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மைசூர் மாநில முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். யாஹியாவின் பேத்தி ஆவார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சாரா ஜுகாகு பயின்றபோது, ​​அல்-சயீத்தை சந்தித்தார். அவ்விருவரும் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர் சங்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். மேலும் 2006ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது சாராவுக்கு 19 வயதும், எல்-சயீதுக்கு 21 வயதும் ஆகியிருந்தது என பத்திரிகை கட்டுரை தெரிவித்துள்ளது.