முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட சிறுநீரகம்

முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட சிறுநீரகம்

முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட சிறுநீரகம்
Published on

உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். 

இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது.

உறுப்பு பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சிறுநீரகத்தை சுமந்து சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com