நேபாளத்தில் முதன்முறையாக ஹாட் ஏர் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
நேபாளத்தில் முதன்முறையாக ஹாட் ஏர் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை பொது மக்கள் குழந்தைகளுடன் சென்று கண்டு களித்தனர். மேளம் வாசித்தும் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் பல வண்ணங்களில் வித்தியாசமான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
இது குறித்து பேசிய பார்வையாளர்கள் இந்த அனுபவம் அருமையாக இருந்ததாகவும், இதைப்போன்று ஒரு திருவிழாவை பார்த்ததில்லை என்றும் கூறினர். சுற்றுலாவை மேம்படுத்த பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரேசில் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து சர்வதேச பங்கேற்பாளர்கள் இடம்பெற்றனர். போக்ரா பள்ளத்தாக்கின் பரந்த காட்சிகளையும், அன்னபூர்ணா, மச்சாபுச்ரே மற்றும் தௌலகிரி மலைத் தொடர்களையும் 40 நிமிட பலூன்பயணத்தில் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகள், இரவில் பலூன் ஒளிரும், வானவேடிக்கை காட்சிகள், பலூன் பந்தயங்கள் மற்றும் முகாம் நடவடிக்கைகள் அனைத்தும் புதிய அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.