உலகம்
மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
தைவானில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
தைவான் தலைநகர் தைபேவில் உள்ள 9 மாடி மருத்துவமனையின் 7வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கு புகை மண்டலம் சூழ்ந்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், அந்த மாடியில் இருந்து நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தைவான் அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.