\
சவுதியில் தீ விபத்து: 10 பேர் பலி

சவுதியில் தீ விபத்து: 10 பேர் பலி

சவுதியில் தீ விபத்து: 10 பேர் பலி
Published on

ரியாத்தில் நடந்த தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாயினர்.

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் தச்சு பட்டறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்ற விவரங்களை சவுதி அரசு தெரிவிக்கவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com