உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்!

உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்!
உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்!

34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்

பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி மீது விமர்சனங்கள் எழுந்தன. தபால்துறை வேலை நிறுத்தம் தொடர்பாக ஆண்டி ரின்னி சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், பிரச்னையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. தொடர் எதிர்ப்பு காரணமாக தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்டி ரின்னி. 

இதனையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த,  34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள சன்னா மரின் உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னா மரின், மக்களின் நம்பிக்கையைப் பெற நாங்கள் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. என் வயது குறித்தும், என் பாலினம் குறித்தும் நான் எதுவும் யோசிக்கவில்லை. என் கவனம் முழுவதும் மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கை குறித்தும், நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் குறித்துமே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com