\
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம்

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம்

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம்
Published on: 

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தால் 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர மஹிந்த அமரவீரா திருத்தங்கள் செய்யப்பட்ட கடற்தொழில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு 2 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதாவில் வழி செய்யப்பட்டது. தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com