ரஷ்யா - உக்ரைன் போர் : செர்னோபில் அணு உலை அருகே நடக்கும் கடும் மோதலால் அச்சம்

ரஷ்யா - உக்ரைன் போர் : செர்னோபில் அணு உலை அருகே நடக்கும் கடும் மோதலால் அச்சம்
ரஷ்யா - உக்ரைன் போர் : செர்னோபில் அணு உலை அருகே நடக்கும் கடும் மோதலால் அச்சம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் அணு உலை இருக்கும் பகுதிக்கு அருகே போர் புரிந்து வருவது உலக நாடுகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து, அண்டை நாடான ரஷ்யா, தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயத்தில் இருந்தநிலையில், உக்ரைனுக்குள் இன்று காலை புகுந்த ரஷ்யா, தீவிரமாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனின் கிழக்குப் பகுதிக்குள் ரஷ்யாவின் ராணுவப் படைகளும், விமான படைகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன.

மறுபுறம் ரஷ்யாவின் ஏவுகணைகளும், உக்ரைனில் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று காலையிலேயே உக்ரைனில் இருக்கும் பாதுகாப்பு தலைமையகத்தை ரஷ்யா தாக்கி அழித்தது. அதேபோல், கிழக்கு உக்ரைனில் இருக்கும் பாதுகாப்பு தளவாடங்கள், விமான நிலையங்கள், விமானப்படை மையங்களை ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகள் மூலம் தாக்கியது. 

தலைநகர் கையிவ், முக்கிய நகரங்களான கர்க்கிவ், டின்ப்ரோ ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அணு உலை உள்ள செர்னோபில் பகுதிக்கு அருகில், இரு நாடுகளும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஏதாவது தாக்குதல் தவறாக நடந்தாலும், அது அணு உலையில் கசிவிற்கு வழி வகுக்கும். இதனால் மீண்டும் ஒரு செர்னோபில் அணு உலை விபத்து நடந்துவிடுமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி, செர்னோபில் அணு உலையிலுள்ள குளிர் சாதன உறை வேலை செய்யவில்லை. இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு தீ பிடிக்க ஆரம்பித்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள், காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள், அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின.

இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக 2000 பேர் வரை பலியாகினர். இதனால் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலகிலயே மிக மோசமான அணு உலை விபத்து இதுவாகும். உக்ரைன் நாடு தங்களின் மின்சார தேவைக்கு அதிக அளவில் அணு உலைகளை நம்பித்தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டின் 52 சதவிகிதம் மின் தேவையை அணு உலைதான் பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com