ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை!

ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை!

ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை!
Published on

கியூபா புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் டயஸ் பலார்ட் (diaz balart) தற்கொலை செய்து கொண்டார்.

ஃபிடலிட்டோ (Fidelito) என்று அனைவராலும் அறியப்பட்ட 68 வயதான பலார்ட், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா நாட்டின் அணு ஆயுத மேம்பாட்டுப் பணியில் இவர் பெரும் பங்கு வகித்தார். அந்நாட்டின் விஞ்ஞானத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com