உலகம்
மறைந்த கால்பந்து வீரருக்கு சக வீரர்கள் வித்தியாசமான அஞ்சலி
மறைந்த கால்பந்து வீரருக்கு சக வீரர்கள் வித்தியாசமான அஞ்சலி
சிலி நாட்டில் இறந்து போன கால்பந்து வீரர் ஒருவருக்கு அவரது சக வீரர்கள் வித்தியாசமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி உள்ளத்தை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.
கிளப் பரிசியன் என்ற கால்பந்து கிளப் அணியின் வீரரான ஜேமி எஸ்காண்டர் அண்மையில் காலமானார். அவர் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை கால்பந்து வலையின் முன் வைத்த சக வீரர்கள் அப்பெட்டியின் மீது பந்தை உதைத்து அது வலைக்குள் செல்லுமாறு செய்தனர். இதன் மூலம் தங்கள் சகா கோல் அடித்துவிட்டதாக அவர்கள் பாவித்தனர். கால்பந்து விளையாட்டில் ஒரு வீரர் கோல் அடித்து விட்டால் அவர் மீது சக வீரர்கள் பாய்ந்து கீழே தள்ளி மகிழ்ச்சியில் கொண்டாடுவது போன்ற அதே நிகழ்வை தங்கள் சகாவின் சவப்பெட்டியின் மீது அவரது நண்பர்கள் செய்து வித்தியாசமான அதே நேரம் உருக்கமான அஞ்சலி செலுத்தினர்.