தலைப்புச் செய்திகள்: ட்ரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி முதல் தேனி தவெக உட்கட்சி பூசல் வரை!
அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் வரும் 13ஆம் தேதி சந்தித்து பேசுகிறார்.
“ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம். திமுக ஆட்சியில் இதுவரை 2,504 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து வரும் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டம் நடத்தப்படும். திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு.
“முதன்முதலாக பெரியாரை எதிர்த்து தனி இயக்கம் தொடங்கியவர் அண்ணா. அண்ணா வந்தபிறகுதான் அரசியல் மேடைகளில் தமிழர் வரலாறு பேசப்பட்டது” - சீமான் கருத்து.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி. மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் 48 கோடியே 95 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணை.
ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்... ஒருவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்... மேலும் சிலரை தேடி வருவதாகவும் விளக்கம்.
இரும்புக்காலம் தமிழகத்தில் தொடங்கியது என்ற ஆய்வு முடிவை மத்திய அரசு இதுவரை அங்கீகரிக்காதது ஏன்? மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்... இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு... மன்பிஜ் நகரத்தில் விவசாய தொழிலாளர்கள் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்குதல்.
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர ருவாண்டா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்... உலக நாடுகளுக்கு காங்கோ அரசு வலியுறுத்தல்.
தயாரிப்பாளராக மாறும் நடிகர் சிலம்பரசன்... தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ்.டி. ஆர். 50ஆவது படத்தை தயாரிக்கிறது ஆத்மன் சினிஆர்ட்ஸ்.
அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி வீசும் விடாமுயற்சி படக்குழு... கடினமான சூழலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு. பாஜக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் விலகியதால் களையிழந்து காணப்படும் தேர்தல் களம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி... விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு.
தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே வெடித்துள்ள உட்கட்சிப் பூசல்... தலைமைக்கு தவறான தகவல்களை அளிப்பதாக மாவட்டச் செயலாளர்கள் மீது மகளிர் அணி உறுப்பினர் குற்றச்சாட்டு.
சமூக செயல்பாட்டாளர் ஜகபர் அலி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் காவல்... பிப்.6 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி.
டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி. மாணவர்களின் எதிர்காலத்துடன் ஆம் ஆத்மி கட்சி விளையாடி வருவதாக விமர்சனம்.
இந்தியாவுக்கு சாம்பியன்ஸ் கோப்பை வரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்த ஐசிசி. மும்பை, பெங்களூரு நகரங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிப்பு.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய முறைகேடுகளை வெளியிட்டதால் தீ வைத்து கொல்ல சதி நடந்ததாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு... வேண்டுமென்றே நடந்தது என்ற புகாருக்கான சான்று இதுவரை கிடைக்கவில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்.