Fears of Hormuz Strait Closure Rise Amid Iran–US-Israel Strikes
Hormuz StraitPt web

ஈரான் | ஹோர்முஸ் நீரிணை முடக்கம்? கடற்பரப்பில் நிற்கும் எண்ணெய்க் கப்பல்கள்!

உலகளாவிய எரிசக்தி பாதையான ஹோர்முஸ் நீர்ச்சந்தியை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முடக்கியிருக்கும் நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை அதிகளவில் உயரும் என அஞ்சப்படுகிறது.
Published on

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் ராணுவம் குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது. அதேசமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈரானையும் தாக்கி வருகின்றன. மாறிமாறி நடத்தப்படும் தாக்குதல் காரணமாக, பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில்தான், உலகலாவிய எரிசக்தி பாதையான ஹோர்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லக்கூடாது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கப்பல்கள் கடற்பரப்பிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணைPt web

ஹோர்முஸ் நீர்ச்சந்தி

சுமார் 35 கிலோ மீட்டர் அகலம், 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஹோர்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இதன் வழியாக நடக்கிறது. 30% வரையிலான எரிவாயுவும் இதன் வழியாகத்தான் நடைபெறுகிறது. இந்த நீர்ச்சந்தி முடங்கியிருப்பதன் காரணமாக கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும். விலை உயர்வு, கால தாமதம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளில் எரிபொருளுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரிணை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை கூட உயரும் என அஞ்சப்படுகிறது.

Fears of Hormuz Strait Closure Rise Amid Iran–US-Israel Strikes
குவைத் | அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான்.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com