மழையால் வெள்ளக்காடாக மாறிய வெனிஸ் நகரம்

மழையால் வெள்ளக்காடாக மாறிய வெனிஸ் நகரம்

மழையால் வெள்ளக்காடாக மாறிய வெனிஸ் நகரம்
Published on

இத்தாலியில் பெய்த கனமழை காரணமாக வெனிஸ் நகரம் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் நகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால், புனித மார்க் சதுக்கத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், அங்கு பொதுமக்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சி‌ல நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் இதேபோன்று மழை பெய்து வெனிஸ் நகரம் மூழ்கியதால் அந்நாட்டு அரசு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com