முன்னாள் அதிபர் டிரம்ப்
முன்னாள் அதிபர் டிரம்ப்புதிய தலைமுறை

முன்கூட்டியே உணர்ந்த டிரம்ப்....? துப்பாக்கிச்சூடுக்கு பின் போட்ட பதிவு!

துப்பாக்கிச்சூட்டில் இருந்து தன்னை பாதுகாத்த சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
Published on

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்காக பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஏதோ தவறுதலாக நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வலது காதின் மேல்பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும், அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் டிரம்ப்
அதிர்ச்சி! பரப்புரையின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; காதுகளை உராசிய குண்டு..உயிர் தப்பினார்!

மேலும் GOD BLESS AMERICA என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்றொருபக்கம், “பென்சில்வேனியாவை சேர்ந்த தாமஸ் மேத்யூ குருக்ஸ்தான் (20) டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டார்” - என்று FBI தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் தாமஸ் மேத்யூ குருக்ஸ் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com