\
"அமைதியாகப் போராடுவது மக்களின் உரிமை!" - இந்திய விவசாயிகளுக்காக ஐ.நா. கருத்துப் பதிவு

"அமைதியாகப் போராடுவது மக்களின் உரிமை!" - இந்திய விவசாயிகளுக்காக ஐ.நா. கருத்துப் பதிவு

"அமைதியாகப் போராடுவது மக்களின் உரிமை!" - இந்திய விவசாயிகளுக்காக ஐ.நா. கருத்துப் பதிவு
Published on: 

அமைதியாக போராட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு, அரசுகள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜரிக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது “மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு, அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்த வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய கருத்துக்களை "தவறான தகவல்" மற்றும் "தேவையற்ற கருத்துகள்" என்றும், இது ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்ததை எதிர்க்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவின் கனட தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com