கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!

கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!
கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!

குரேஷியாவில் சீனாவின் உதவியுடன் கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது.

குரேஷியா நாட்டில் கோமர்னா (Komarna) என்ற பகுதியில் கடற்பரப்பின் மீது இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டுள்ளது. சீனா அரசின் உதவியுடன் அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் 2018 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. கொரோனா காலத்தில் தடைபட்ட பணிகள், தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற பாலத்தின் திறப்பு விழாவில், கலைநிகழ்ச்சிகளும் வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெற்றது.

தொழில்நுட்ப ரீதியாக கட்டுமானப் பணிகளுக்கு சீனா உதவியபோதிலும், இத்திட்டத்திற்கு அதிகமான நிதி வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்தான், கிட்டத்தட்ட 85% நிதியை ஐரோப்பிய யூனியன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com