சோமாலியாவில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தால், 48 மணி நேரத்தில் 110 பேர் உயிரிழந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து பஞ்சத்தை, தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சோமாலியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேருக்கு உணவும், பிற மனித நேய உதவிகளும் தேவைப்படுவதாக, ஐக்கிய நாடுகள் அவை மதிப்பிட்டிருக்கிறது. உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்காவிட்டால், மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. நிலைமை மோசமாவதைத் தொடர்ந்து, ஐ.நா. மனிதநேய ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஓ பிரியன் சோமாலியாவுக்குச் செல்ல இருக்கிறார். சோமாலியா தவிர, தெற்கு சூடான், கென்யா, நைஜீரியா, ஏமன் ஆகிய நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. கூறியிருக்கிறது.